/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சட்ட விரோத கனிம வள திருட்டு: மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
/
சட்ட விரோத கனிம வள திருட்டு: மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
சட்ட விரோத கனிம வள திருட்டு: மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
சட்ட விரோத கனிம வள திருட்டு: மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
ADDED : நவ 08, 2024 11:40 PM
உடுமலை; அனுமதியின்றி, அரசு மற்றும் பட்டா நிலங்களில் கனிமங்கள் வெட்டி எடுப்பது மற்றும் வாகனங்களில் எடுத்துச்சென்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் அரசின் முறையான அனுமதியின்றி, அரசு புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்களில், சட்ட விரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பது மற்றும் அனுமதியின்றி வாகனங்களில் எடுத்துச் செல்வது, கனிமம் மற்றும் சுரங்கங்கள் சட்டம் மற்றும் சிறு கனிம சலுகை விதிகளின் கீழ், தண்டனைக்குரிய குற்றமாகும்.
அனுமதியின்றி சட்ட விரோதமாக கனிமங்களை எடுத்து செல்வதை தடுக்கும் வகையில், வருவாய்த்துறை, கனிம வளத்துறை மற்றும் காவல்துறை வாயிலாகவும், தாசில்தார் தலைமையில் செயல்படும் வட்ட அளவிலான கண்காணிப்பு குழு வாயிலாகவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அரசு ஆணை அடிப்படையில், சட்ட விரோதமாக கனிமங்களை வெட்டி எடுத்துச் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, சட்ட விரோதமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்படும் நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் மீது உரிய அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் அரசின் அனுமதியின்றி, சட்ட விரோதமாக கனிமங்களை வெட்டி எடுத்து செல்வது தொடர்பான தகவல்களை, வருவாய்த்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை, போலீசார் மற்றும் மாவட்ட மற்றும் வட்ட அளவிலான கண்காணிப்பு குழுவிடம் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.