/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சியில் முறைகேடாக குடிநீர் இணைப்பு; முறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தல்
/
ஊராட்சியில் முறைகேடாக குடிநீர் இணைப்பு; முறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தல்
ஊராட்சியில் முறைகேடாக குடிநீர் இணைப்பு; முறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தல்
ஊராட்சியில் முறைகேடாக குடிநீர் இணைப்பு; முறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தல்
ADDED : டிச 25, 2024 08:17 PM
உடுமலை; உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில், குழாய் இணைப்பு முறைகேடுகளால் குடியிருப்புகளுக்கு சீரான குடிநீர் வினியோகம் தடைபடுகிறது.
உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளுக்கு திருமூர்த்தி அணையை ஆதாரமாகக் கொண்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடியிருப்புகள் அதிகமாக உள்ள பெரியகோட்டை மற்றும் கணக்கம்பாளையம் ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம் தொடர் பிரச்னையாக உள்ளது.
கூட்டு குடிநீர் திட்டத்தில், கடந்தாண்டு பலமாற்றங்கள் செய்யப்பட்டு பல்வேறு திட்டங்களை ஒன்றாக இணைத்து, தற்போது அனைத்து ஊராட்சிகளுக்கும் ஒரே திட்டமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஊராட்சிகளில் முன்பை விட தொடர்ந்து குடிநீர் தட்டுபாடு ஏற்படுவதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். குடியிருப்புகளில் முரண்பாடான நிலையில் குடிநீர் வினியோகம் நடக்கிறது. மேலும், முறைகேடாக குழாய்கள் அமைக்கப்பட்டிருப்பதால் மற்ற குடியிருப்புகளுக்கு சீரான குடிநீர் கிடைப்பதில் தடை ஏற்படுகிறது. நான்கு நாட்களுக்கு ஒருமுறையாக இருந்த குடிநீர் வினியோகம், தற்போது, 14 நாட்களுக்கு ஒருமுறை நடக்கிறது.
மேலும், நள்ளிரவிலும், அதிகாலை 3:00 மணிக்கும் குடிநீர் வினியோகம் இருப்பதால், வீட்டு பயன்பாட்டிற்கு குடிநீர் பிடிக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
குடிநீர் பிரச்னைக்கு, ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரியத்தை மட்டுமே புகார் செய்வதாகவும், நடவடிக்கையை தீவிரப்படுத்தாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை அப்புறப்படுத்தவும், அனைத்து குடியிருப்புகளிலும் சீராகவும், சமமான முறையிலும் குடிநீர் வினியோகம் நடப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.