/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இடைத்தரகர்களுக்கு உடனடி 'சேவை'; மண்டல கூட்டத்தில் 'பகீர்' குற்றச்சாட்டு
/
இடைத்தரகர்களுக்கு உடனடி 'சேவை'; மண்டல கூட்டத்தில் 'பகீர்' குற்றச்சாட்டு
இடைத்தரகர்களுக்கு உடனடி 'சேவை'; மண்டல கூட்டத்தில் 'பகீர்' குற்றச்சாட்டு
இடைத்தரகர்களுக்கு உடனடி 'சேவை'; மண்டல கூட்டத்தில் 'பகீர்' குற்றச்சாட்டு
ADDED : அக் 25, 2024 10:49 PM
அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி, முதல் மண்டல கூட்டம் தலைவர் உமாமகேஸ்வரி, தலைமையில் உதவி கமிஷனர் கணேசன், முன்னிலையில் நடைபெற்றது.
இதில், கவுன்சிலர்கள் பேசியதாவது:
செல்வராஜ் (இ.கம்யூ): அவிநாசி ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுப்பர்பாளை யத்தில் இருந்து, திருப்பூர் செல்ல ஒரு மணி நேரத்திற்கு மேலாகிறது. புதிய வரி விதிப்பு, பெயர் மாற்றம் குறித்து, கவுன்சிலர் கொடுத்தால் நடப்பதில்லை. இடைத்தரகர்கள் கொடுத்தால் உடனே நடக்கிறது.
நாகராஜ் (ம.தி.மு.க): பிளாஸ்டிக் பாட்டில்,கேரி பேக் பயன்பாடு அதிகமாக உள்ளது. அதன் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வரி விதிப்பு அதிகமாக உள்ளது. அதனால்தான் கட்ட மறுக்கின்றனர். பலர் குறைக்க கோரி கடிதம் கொடுத்து வருகின்றனர். குறைக்க வேண்டும்.
சகுந்தலா (அ.தி.மு.க): எனது வார்டிலுள்ள வீதிகளில் குப்பை தேங்கி கிடக்கிறது. நாய் தொல்லை அதிகமாக உள்ளது.கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரேமலதா (தி.மு.க): நாய் தொல்லை அதிகமாக உள்ளது. கட்டுப்படுத்த வேண்டும். திருவள்ளுவர் நகரில் பொது கழிப்பிடம் கட்டி இரண்டு ஆண்டாகியும் திறக்கப்படவில்லை.
தங்கராஜ், (அ.தி.மு.க): பல வீதிகளில் தெரு விளக்கு பொருத்தப்பட்டு, மீட்டர் இல்லாததால், பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. மின் வாரிய அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.சிறுபூலுவபட்டி ரிங் ரோடு தனியார் நிறுவனம் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி சீரமைக்காமல் உள்ளது. தினசரி விபத்து ஏற்படுகிறது.
குணசேகரன் (பா.ஜ): குப்பை எடுக்க ஆட்கள் சரியாக வருவதில்லை.
ரவிச்சந்திரன் (இ.கம்யூ): வீதி முழுவதும்குப்பை தேங்கி உள்ளது. குப்பை கொட்ட இடமில்லா நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வை அரசுதான் ஏற்படுத்த வேண்டும்.
நாய்களால் ஆபத்து
திருப்பூர் மாநகராட்சி முதலாம் மண்டல கூட்டத்தில், சகுந்தலா, பிரேமலதா, திவ்யபாரதி, அனுசுயா, பத்மாவதி, துளசிமணி ஆகிய பெண் கவுன்சிலர்கள் பேசுகையில், 'எங்களது வார்டு பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வண்டியில் செல்வோரை துரத்துவதும், அதனால், அவர்கள் கீழே விழுந்து காயமடைவது அன்றாக நிகழ்ச்சியாகி விட்டது. உரிய நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில், மேயர், கமிஷனர் உடனே எடுக்க வேண்டும். நாய்களின் தொல்லை எல்லையில்லாமல் போய்விடும் ஆபத்து உள்ளது' என்றனர்.