/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளைச்சல் பாதிப்பு எதிரொலி; ஒரு முருங்கை 20 ரூபாய்
/
விளைச்சல் பாதிப்பு எதிரொலி; ஒரு முருங்கை 20 ரூபாய்
விளைச்சல் பாதிப்பு எதிரொலி; ஒரு முருங்கை 20 ரூபாய்
விளைச்சல் பாதிப்பு எதிரொலி; ஒரு முருங்கை 20 ரூபாய்
ADDED : நவ 28, 2025 03:41 AM
திருப்பூர்: வரத்து குறைந்த நிலையில், சாம்பாருக்கு முருங்கையை பலரும் தேடுவதால், மார்க்கெட்டில் முருங்கை விலை உயர்ந்துள்ளது.
சமீபத்தில் பெய்த மழை காரணமாக, செடிகளில் காய் காய்க்கும் நிலையில் இருந்த பூக்கள் உதிர்ந்து விட்டது. இரவு, அதிகாலை நேரத்தில் குளிர், நாள் முழுதும் மேகமூட்டம், வெயில் குறைவு காரணமாக முருங்கை விளைச்சல் பாதித்துள்ளது.
இச்சூழலில், முருங்கை விற்பனை சந்தையில் சூடுபிடித்துள்ளது. ஒட்டன்சத்திரம் உட்பட வெளியூரில் இருந்து திருப்பூருக்கான முருங்கை வரத்து குறைந்த நிலையில், உள்ளூர் வரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால், 100 கிலோ முருங்கை வருவதே அரிதாக உள்ளது. விரல்விட்டு எண்ணக்கூடிய விவசாயிகள் மட்டுமே முருங்கை கொண்டு வருவதால், மவுசு கூடியுள்ளது. நேற்று ஒரு கிலோ முருங்கை, 220 - 250 ரூபாய்க்கும், ஒரு காய், 15 - 20 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
திடீர் கிராக்கி ஏன்?
கார்த்திகை மாதம் பிறந்து, பத்து நாட்களாகிய நிலையில், காய்கறி விற்பனை சற்று அதிகரித்துள்ளது. சாம்பாருக்கான காய்கறிகளில் முருங்கை முதன்மையானதாக இருப்பதால், இல்லத்தரசிகள் அதனை தேடுகின்றனர். வரத்து அடியோடு குறைந்த நிலையில், விற்பனை திடீரென அதிகரித்தால், விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. வரத்து இயல்புக்கு வந்தால், விலை குறையும் என்கின்றனர், உழவர் சந்தை அலுவலர்கள்.

