/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்டில் பிளாஸ்டிக் கழிவு மூட்டைகளால் பாதிப்பு
/
பஸ் ஸ்டாண்டில் பிளாஸ்டிக் கழிவு மூட்டைகளால் பாதிப்பு
பஸ் ஸ்டாண்டில் பிளாஸ்டிக் கழிவு மூட்டைகளால் பாதிப்பு
பஸ் ஸ்டாண்டில் பிளாஸ்டிக் கழிவு மூட்டைகளால் பாதிப்பு
ADDED : ஜன 04, 2024 11:28 PM

உடுமலை;உடுமலை பஸ் ஸ்டாண்டில், பிளாஸ்டிக் கழிவு மூட்டைகளால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. உடுமலை பஸ் ஸ்டாண்டில், நகர பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பையிலிருந்து, துாய்மைப்பணியாளர்களால் பிளாஸ்டிக் கழிவு பிரித்து எடுக்கப்படுகிறது.
அவற்றை முறையாக அப்புறப்படுத்தப்படாமல், பிளாஸ்டிக் கழிவு மூட்டைகள், பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு, கழிவு மூட்டைகளிலிருந்து மீண்டும் பிளாஸ்டிக் கழிவுகள், பஸ் ஸ்டாண்டிற்குள் பரவும் அபாயம் உள்ளது.
எனவே, நகர பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவுகளை, முறையாக அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.