sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அமெரிக்க வரியால் பாதிப்பு: விரைவில் நல்ல அறிவிப்பு.. திருப்பூர் பின்னலாடை துறையினர் எதிர்பார்ப்பு

/

அமெரிக்க வரியால் பாதிப்பு: விரைவில் நல்ல அறிவிப்பு.. திருப்பூர் பின்னலாடை துறையினர் எதிர்பார்ப்பு

அமெரிக்க வரியால் பாதிப்பு: விரைவில் நல்ல அறிவிப்பு.. திருப்பூர் பின்னலாடை துறையினர் எதிர்பார்ப்பு

அமெரிக்க வரியால் பாதிப்பு: விரைவில் நல்ல அறிவிப்பு.. திருப்பூர் பின்னலாடை துறையினர் எதிர்பார்ப்பு


ADDED : நவ 07, 2025 09:48 PM

Google News

ADDED : நவ 07, 2025 09:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: ''அமெரிக்க வரி உயர்வு பாதிப்புகளை விரிவாக விளக்கியுள்ளதால், இம்மாத இறுதிக்குள் நல்ல அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது,'' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுசெயலாளர் திருக்குமரன் பேசினார்.

ஜி.எஸ்.டி., -2.0 மற்றும் இ.எஸ்.ஜி., (சுற்றுச்சூழல் சமூக பொறுப்பு) மற்றும் அமெரிக்க வரி உயர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி, சைமா சங்கத்தில் நடந்தது. இந்திய தொழிற் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட குழு (சி.ஐ.ஐ.,), திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சைமா சார்பில் நடந்த நிகழ்ச்சியில், 'இ.ஒய். இந்தியா' நிறுவன பிரதிநிதிகள் விளக்கி பேசினர்.

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் சண்முகசுந்தரம்:

மாறிவரும் தொழில்நுட்பத்தை அனைத்தும் தெரிந்துகொள்ள வேண்டும்; அதற்கான முயற்சி தொடரும். சி.ஐ.ஐ., வாயிலாக, இத்தகைய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளாடை மற்றும் பின்னலாடை துறையில் உள்ள அனைவருக்கும் இன்றைய கலந்துரையாடல் அவசியமானது. ஜி.எஸ்.டி., வரி மறுசீரமைக்கப்பட்ட பிறகு, வரி செலுத்துவது எளிதாகியுள்ளது; அதேபோல், நமது நிறுவன வளர்ச்சியும் எளிதாகும் என்று நம்புகிறோம். இருப்பினும், புதிய முறைக்கு மாற தெளிவு பெற வேண்டும். சர்வதேச சந்தைகளில், இ.எஸ்.ஜி., என்பது மிக முக்கியமானது. அதனை அனைவரும் தெரிந்துகொண்டு, தெளிவு பெற வேண்டும்.

உள்நாட்டு முதலீட்டாளர், உற்பத்தியாளருக்கும் இ.எஸ்.ஐ. கட்டாயமாகப்போகிறது. அடுத்த, ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முழுவதும் அமலாகவும் வாய்ப்புள்ளது. தற்போதே திருப்பூர் தொழில்துறையினர் முழு அளவில் தயாராக வேண்டும்.

இந்திய தொழிற்கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) மாவட்ட தலைவர் மனோஜ்குமார்:

திருப்பூரின் எதிர்காலத்துக்கு மிகவும் அவசியமான, மூன்று தலைப்புகளில் கலந்துரையாடல் நடக்க உள்ளது. 'ஜி.எஸ்.டி., -2.0', 'இ.எஸ்.ஜி.,' மற்றும் அமெரிக்க டேரிப் குறித்து, முக்கிய தொழில் வல்லுனர்கள் பேச உள்ளனர். 'இ.ஓய்., இந்தியா' நிறுவனத்தினர், இதுதொடர்பாக தொழில்நுட்ப பகிர்வு வழங்க உள்ளனர்.

இத்தகைய நிகழ்ச்சிகளால், தொழில் வலிமை பெறும்; வியாபார உலகம் மிகவேமாக மாறி வருகிறது; நாம் தயாராகவிட்டால் பின்தங்கிவிடுவோம். ஜி.எஸ்.டி., வரிசீரமைப்பு என்பது திருத்தம் மட்டுமல்ல; வரி செலுத்துவது எளிதாகம், சிறப்பாகவும் மாற்றப்பட்டுள்ளது. வணிகர்கள் உணர்ந்து, நாமும் தயாராக வேண்டும்,

சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் என்பதே, சி.எஸ்.ஜி., என்கிறோம்; ஜி.எஸ்.ஜி., என்பது பேச்சுவார்த்தை அல்ல. நிலையான வளர்ச்சிக்கு அடிப்படையான சந்தையாக, நம்மை மேம்படுத்தி காண்பிக்க வேண்டும். திருப்பூர் பொறுத்தவரை பசுமை சார் உற்பத்தி மூலமாக, உலகளாவிய பொறுப்புள்ள நவீன தொழில்துறையாக அடையாளப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், கோவை முதன்மை கமிஷனர் (கலால் ) தினேஷ் பங்கர்ஹர், உதவி கமிஷனர் கார்த்திகேயன் உள்ளிட்டோர், வரி சீரமைப்பு குறித்து விளக்கி பேசினர். சைமா துணை தலைவர் பாலசந்தர், பொதுசெயலாளர் தாமோதரன், பொருளாளர் சுரேஷ்குமார், செயற்குழு உறுப்பினர் சசிகுமார், சி.ஐ.ஐ. துணை தலைவர் சுனில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

'கார்பன்' உழிழ்வு இல்லாத நகர்

ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதாக இருக்கிறது; ஏற்றுமதியாளர்களும் பயன்பெற்று வருகின்றனர். உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த, தனி 'பிராண்ட்' உருவாக்க வேண்டும். அமெரிக்க வரி உயர்வு பிரச்னையால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, 10 முதல், 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கி, அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வருகிறோம். குறு, சிறு நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன; அவர்களால், தள்ளுபடியும் வழங்க முடியாது. 'போக்கஸ் மார்க்கெட்' திட்டத்தில், 15 சதவீதம் சிறப்பு சலுகை வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம். தள்ளுபடி வழங்குவதால், அரசு உதவி இருந்தால் மட்டுமே அமெரிக்க ஏற்றுமதியை தொடர முடியும். பிரதமரிடமும், இதுதொடர்பாக ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளோம். பிரச்னைகளை தெளிவாக விளக்கியுள்ளதால், இம்மாத இறுதிக்குள் நல்ல தகவல் கிடைக்கும். அமெரிக்காவும், வர்த்தக ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது; பேச்சுவார்த்தை மூலமாக, சுமூகமான தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம். பேச்சுவார்த்தையிலும் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. அமெரிக்காவுக்கு மாற்றான சந்தையை கண்டறிய, குறைந்தது இரண்டு ஆண்டு திட்டமிட்டு செயல்பட வேண்டும். பல்வேறு சவால்கள் இருப்பதால், அரசு உதவி கேட்டிருக்கிறோம். ஏற்றுமதியாளர்களை போல், உள்நாட்டு உற்பத்தியாளரும், தரச்சான்றிதழ் பெற்றவர்களாக மாற வேண்டும். வரும், 2030ம் ஆண்டுக்குள் 'கார்பன் நியூட்ரல்' என்ற இலக்கை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் நிர்ணயம் செய்து இயங்கி வருகிறது. திட்டமிட்டபடி, 'கார்பன்' உமிழ்வு இல்லாத நகரமாக மாற்றுவோம். - திருக்குமரன் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுசெயலாளர்








      Dinamalar
      Follow us