/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
1994ம் ஆண்டு சட்டத்தை அமல்படுத்துங்க! பி.ஏ.பி., பாசன திட்ட விவசாயிகள் வலியுறுத்தல்
/
1994ம் ஆண்டு சட்டத்தை அமல்படுத்துங்க! பி.ஏ.பி., பாசன திட்ட விவசாயிகள் வலியுறுத்தல்
1994ம் ஆண்டு சட்டத்தை அமல்படுத்துங்க! பி.ஏ.பி., பாசன திட்ட விவசாயிகள் வலியுறுத்தல்
1994ம் ஆண்டு சட்டத்தை அமல்படுத்துங்க! பி.ஏ.பி., பாசன திட்ட விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 12, 2025 12:24 AM

பல்லடம்; கடந்த, 1994ம் ஆண்டு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, பல்லடத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பி.ஏ.பி., பாசன விவசாயிகள் வலியுறுத்தினர்.
பல்லடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில், பி.ஏ.பி., பகிர்மான குழு தலைவர்கள் மற்றும் பாசன சபை தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. உதவி செயற்பொறியாளர் ஆனந்த தண்டபாணி தலைமை வகித்தார்.
பாசன சபை விவசாயிகள் பேசியதாவது: ஒவ்வொரு முறை பாசன நீர் வினியோகத்தின் போதும், முறையாக தண்ணீர் கிடைக்காமல், கடைமடை விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எங்களுக்கான உரிமை நீரும் கூட முறையாக கிடைப்பதில்லை.
ஆனால், கோதவாடி, வட்டமலைக்கரை, உப்பாறு மற்றும் வெள்ளகோவில் என, பல்வேறு பகுதி விவசாயிகளுக்கும் பாசத்துக்கான நீர் பிரித்து வினியோகிக்கப்படுகிறது.
குடிநீருக்கே வழியில்லை என்று கூறிதான் தண்ணீரை பெறுகின்றனர். இதனால், பாசன விவசாயிகளான நாங்கள் பாதிக்கப்படுகிறோம். யாருக்கும் தண்ணீர் தர வேண்டாம் என்று கூறவில்லை.
பாசன பரப்புகளுக்கு போக மீதமுள்ள தண்ணீரை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லுங்கள். பி.ஏ.பி., நீர், பாசன பரப்புகளுக்கு மட்டுமே உரிமை உள்ளது. உப்பாறு விவசாயிகள் தொடர்ந்த வழக்கில், கடந்த, 1994ம் ஆண்டு சட்டத்தை பின்பற்றுமாறு கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
பாசன காலத்துக்கு முன்னரோ, மண்டல பாசனங்கள் முடிந்த பின்னரோ, தண்ணீர் இருக்கும் பட்சத்தில், பகிர்மான குழு ஆலோசனைகளைப் பெற்று தண்ணீர் வினியோகிக்கலாம் என்றுதான் அரசாணையில் உள்ளது.
இவ்வாறு இருக்க, இடையிடையே எதற்காக பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. அரசியல் காரணமா? அல்லது அதிகாரிகள் தான் இதற்குக் காரணமா?
தண்ணீருக்காக ஒவ்வொரு முறையும் சண்டையிட வேண்டி உள்ளது. பகிர்மான குழு நிர்வாகிகள் பெரும்பாலும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களாக உள்ளீர்கள். தமிழக அரசிடம் நிதி பெற்று, வாய்க்கால்களை முறையாக துார்வாரி கடைமடை வரை தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யுங்கள்.
நுாறு நாள் திட்டப் பணியாளர்களை பயன்படுத்தி, வாய்க்கால்களை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோர்ட் உத்தரவுப்படி, கடந்த, 1994ம் ஆண்டு சட்டத்தை பின்பற்றி, பாசன பரப்புகளுக்கு மட்டுமே தண்ணீர் வினியோகிக்க வேண்டும். பாசன பரப்புகளுக்கு போக தண்ணீர் மீதம் இருந்தால், பாசன சபை மற்றும் பகிர்மான குழுவை ஆலோசித்து, அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.