/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வண்டல் மண் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்துங்க!
/
வண்டல் மண் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்துங்க!
ADDED : ஜூலை 06, 2025 11:09 PM
உடுமலை; திருமூர்த்தி அணையில், விவசாயிகள் மண் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக அரசு, நீர் நிலைகளில் கூடுதல் நீர் சேமிக்கும் வகையிலும், விவசாய விளை நிலங்களை வளமாக்கும் வகையிலும், விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், கடந்தாண்டு, உடுமலை திருமூர்த்தி அணையில், 4 சர்வே எண்களில், ஒரு லட்சத்து, 10 ஆயிரம் கனமீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளித்தது.தொடர் மழை, அணை நீர்மட்டம் உயர்வு உள்ளிட்ட காரணங்களினால், 22 ஆயிரம் கன மீட்டர் மட்டுமே மண் அள்ளப்பட்டது.
தற்போது, மூன்றாம் மண்டல பாசனம் நிறைவு பெற்றுள்ள நிலையில், ஒரு மாதம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். எனவே, மீதம் உள்ள வண்டல் மண்ணை, விவசாயிகள் விளை நிலங்களுக்கு பயன்படுத்தும் வகையில், நடப்பாண்டு அனுமதியளிக்க, மாவட்ட நிர்வாகமும், நீர் வளத்துறை, வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.