ADDED : ஜூன் 09, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:
தமிழ்நாடு இருப்பு கிடங்கு விதிகள்படி, குவாரிகளிலிருந்து எம்.சாண்ட், ஜல்லி ஆகியவற்றை, போக்குவரத்து நடைச்சீட்டு பெற்று, எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கான ஹாலோகிராம் ஒட்டப்பட்ட நடைச்சீட்டுகள் பயன்பாடு நிறுத்தப்படுகிறது. எம்.சாண்ட், ஜல்லி முதலான கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்ல, வரும் 9ம் தேதி முதல் (இன்று) மின்னணு சீட்டு வழங்கப்படும். www.mimas.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக, மின்னணு முறையில் வழங்கப்படும் நடைச்சீட்டு மட்டுமே செல்லுபடியாகும். மின்னணு நடைச்சீட்டு இல்லாமல், கட்டுமான பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.