/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 29, 2025 07:07 PM
உடுமலை:
பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை செயல்படுத்த, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகள், பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை பல பெற்றோரும், பதட்டத்துடன் மட்டுமே இருக்கின்றனர்.
குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதும், அவர்களுக்கு முறையான பழக்கவழக்கங்களையும், 'குட் டச், பேட் டச்', என்ற தொடுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டுமென உளவியல் ஆலோசகர்கள் தொடர்ந்து அறிவுறுத்துகின்றனர்.
இருப்பினும், இன்னும், பெரும்பான்மையான பெற்றோர் குழந்தைகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை கற்றுக்கொடுப்பதில் அலட்சியமாகவே உள்ளனர்.
பெற்றோருக்கு அடுத்தபடியாக, குழந்தைளை கண்காணிக்கும், வழிநடத்தும் பொறுப்பு, பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ளது.
பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கென, தன்னார்வலர்கள் வாயிலாகவும், அரசின் சார்பிலும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்தப்படுகிறது. ஆனால், இவ்வாறு நடத்தப்படும் ஒருநாள் நிகழ்ச்சிகளால், எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.
வளர்இளம் பருவ மாணவியருக்கு, நடமாடும் உளவியல் மையத்தின் வாயிலாக ஆலோசனை வழங்கப்படுகிறது. ஆனால், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கென சிறப்பு கல்வி பள்ளிகளில் இல்லை.
பெண் குழந்தைகளுக்கு பாடத்தோடு, பாதுகாப்புடன் இருக்கவும் கற்றுக்கொடுக்கும் கல்வியை பள்ளிகளில் செயல்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கல்வி பள்ளிகளில் தீவிரப்படுத்தப்படுவதோடு, கல்வித்துறை கண்காணிக்கவும் வேண்டும்.
அரசுப்பள்ளிகளில், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கென, அவர்கள் பிறரிடம் பழக வேண்டிய விதம், பெற்றோரை தவிர மற்றவர்களை அந்த இடைவெளியில் வைக்க வேண்டும்.
தெரியாத நபர்களுடன் பேசுவதில் எச்சரிக்கை, உள்ளிட்ட அனைத்து வழிமுறைகைளையும், ஆசிரியர்கள் தொடர்ந்து மாணவர்களுக்கு வகுப்பாகவே ஆலோசனை வழங்க வேண்டும். கல்வித்துறை இந்த செயல்பாட்டை தீவிரப்படுத்த வேண்டுமென பள்ளி மேலாண்மைக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.