/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆதினத்தை சிறை வைப்பதா? அர்ஜுன் சம்பத் ஆவேசம்
/
ஆதினத்தை சிறை வைப்பதா? அர்ஜுன் சம்பத் ஆவேசம்
ADDED : ஜன 28, 2025 06:52 AM

தாராபுரம்: திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற மதுரை ஆதினத்தை, போலீசார் தடுத்ததை, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கண்டித்து உள்ளார்.
இந்து மக்கள் கட்சி திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் தாராபுரத்தில் நடந்தது. தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார்.
இதில் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியதாவது: திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழி அறுப்போம் என, செயற்கையாக ஒரு பிரச்னை உருவாக்கப்படுகிறது. அங்குள்ள பழங்கால சமணர் குகை மீது பச்சை வர்ணம் பூசப்பட்டுள்ளது. மலை முழுவதும் கோவிலுக்கு சொந்தமானது என பிரிட்டிஷ் காலத்தில் கூறப்பட்டுள்ளது. கோவிலை பார்வையிட செல்ல முயன்ற மதுரை ஆதினத்தை, அரசு சிறை வைக்கிறது.
மலை மீது ஆடு, கோழி வெட்டுவதை தடைசெய்து, மலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தர்காவை அகற்ற வேண்டும். திருப்பூரில் நடந்த புத்தக கண்காட்சியில், காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ்., என அவதுாறு பிரசாரத்தை, கரு.பழனியப்பன் பரப்பியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
புத்தகத் திருவிழா பெயரில் ஈ.வெ.ரா., புகழை பரப்ப, கல்வி அலுவலர்களை அரசு பயன்படுத்துவது தவறானது. இவ்வாறு அவர் கூறினார்.