/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சரிவர மூடப்படாத குழிகள்; விபத்துகள் தொடர்கதை
/
சரிவர மூடப்படாத குழிகள்; விபத்துகள் தொடர்கதை
ADDED : பிப் 19, 2024 12:32 AM

அவிநாசி;திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், அவிநாசியில் இருந்து திருப்பூர் மாநகராட்சி வரை செல்லும் இரண்டாம் திட்ட குடிநீர் வினியோகத்திற்காக புதிய குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அம்மாபாளையம் போலீஸ் செக்போஸ்ட் அருகில் குழாய்கள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகளை குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர்கள், அவசரகதியில் சரிவர மூடாமல் அலட்சியமாக பணியை மேற்கொண் டுள்ளனர்.
நேற்று சரக்கு வாகனம் ஒன்று அப்பகுதியை கடக்கும் பொழுது குழியில் சிக்கியதால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமுருகன்பூண்டி போலீசார் விரைந்து செயல்பட்டு கிரேன் மூலம் சரக்கு வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
சரிவர மூடப்படாத குழிகளால், விபத்துகள் தொடர் கதையாகின்றன.

