/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரதிஷ்டை விவகாரம்; இருதரப்பினர் மோதல்
/
பிரதிஷ்டை விவகாரம்; இருதரப்பினர் மோதல்
ADDED : ஜூலை 20, 2025 11:23 PM
திருப்பூர்; ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் சார்பில், விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் பிரதிஷ்டை செய்து, பின் ஊர்வலமாக சென்று விசர்ஜனம் செய்வது வழக்கம். இந்தாண்டு சிலைகள் வைக்கப்படும் இடம் தொடர்பாக போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர்.
திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, திருநீலகண்டபுரத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் இடம் தொடர்பாக ஹிந்து முன்னணியை சேர்ந்த சரவணன், வினோத் மற்றும் மற்றொரு தரப்பான பா.ஜ.,வை சேர்ந்த வெங்கடேஷ் உள்ளிட்ட சிலருடன் நேற்று முன்தினம் பிரச்னை ஏற்பட்டது.
இதில், காயமடைந்த சரவணன், வினோத் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இதுகுறித்து தகவலறிந்து, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்டோர் காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தனர். தாக்குதல் தொடர்பாக, திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
மோதல் ஏன்?
ஹிந்து முன்னணியில் இருந்தவர், அதில் இருந்து விலகி பா.ஜ.,வில் சமீபத்தில் இணைந்தார். அங்கு சென்றவர், வழக்கமாக பிரதிஷ்டை செய்யும் இடத்தில் சிலை வைக்க திட்டமிட்ட போது, ஹிந்து முன்னணியினருடன் பிரச்னை ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இருதரப்பும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இருதரப்பு புகாரின் பேரில் விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.