/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜல்லிக்கட்டு நினைவு சதுக்கம் திறப்பு
/
ஜல்லிக்கட்டு நினைவு சதுக்கம் திறப்பு
ADDED : செப் 20, 2024 10:04 PM
உடுமலை : உடுமலை நகராட்சி பஸ் ஸ்டாண்ட் பகுதியில், ரூ.55 லட்சம் மதிப்பில், ஜல்லிக்கட்டு நினைவு சதுக்கம், தலைவர்கள் நினைவு பூங்கா, நீரூற்று உள்ளிட்டவை திறப்பு விழா நடந்தது.
உடுமலை நகராட்சி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரவுண்டானா, சாலை சந்திப்புகளில், ரூ.55 லட்சம் மதிப்பில், ஜல்லிக்கட்டு காளையை வீரர்கள் அடக்கும் வகையில், தமிழ் எழுத்துக்கள் மற்றும் பூங்காவுடன் கூடிய ஜல்லிக்கட்டு நினைவு சதுக்கம், புதுப்பிக்கப்பட்ட அசோக ஸ்துாபி, வண்ண மின் விளக்குகள், நீரூற்றுடன் கூடிய பூங்கா, போஸ்ட் பாக்ஸ் மற்றும் தலைவர்கள் நினைவு பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
உடுமலை நகரின் மத்தியில் அடையாளமாகவும், அழகாகவும் அமைக்கப்பட்டுள்ள, இவற்றின் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்தார். அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.
பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, நகராட்சித்தலைவர் மத்தீன், முன்னாள் நகராட்சித்தலைவர் வேலுசாமி, துணைத்தலைவர் கலைராஜன் மற்றும் கவுன்சிலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.