/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செல்வ விநாயகர் கோவில்கும்பாபிேஷக விழா துவக்கம்
/
செல்வ விநாயகர் கோவில்கும்பாபிேஷக விழா துவக்கம்
ADDED : பிப் 17, 2024 01:34 AM
திருப்பூர், பிப். 17-
பெருமாநல்லுார் அருகே ஈட்டிவீரம்பாளையம், மொய்யாண்டம்பாளையத்தில் உள்ள செல்வ விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா துவங்கியது.
நேற்று காலை, 8:00 மணிக்கு, கணபதி யாகத்துடன் விழா துவங்கியது. இன்று, (17ம் தேதி), விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி ஆகியவை நடந்தன. நாளை, (18ம் தேதி), பாலிகை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்படுகின்றன.
வரும், 19ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, கோவிலில் இருந்து, புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்த குடங்கள், முளைப் பாலிகை, சகல வாத்தியம் முழங்க கோவிலுக்கு எடுத்து வரப்படும். மாலை, 5:00 மணிக்கு, முதல் கால யாக பூஜை நடத்தப்படுகிறது.
வரும், 20ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை; மாலை, 6:00 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. 21ம் தேதி, அதிகாலை, 4:30 மணிக்கு விநாயகர் வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து, மகா கும்பாபிேஷகம் நடத்தப்பட இருக்கிறது. விழாவையொட்டி, அன்று காலை, 9:00 மணி முதல் பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.