ADDED : ஜூன் 20, 2026 04:43 AM

திருப்பூர்: மத்திய அரசின் 'விக் ஷித் பாரத்' திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்புடன் இணைந்த மானியம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் ஏ.வி.பி. பள்ளியில் நேற்று நடந்தது.
டெல்லியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள 15 லட்சம் தொழிலாளர்களுக்கான ஊக்கத்தொகை 2,400 கோடி ரூபாயை விடுவித்த நிகழ்ச்சி, திருப்பூர், ஏ.வி.பி. கல்லுாரியில், நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
கடந்த 2025 ஆகஸ்ட் 1 முதல் 2027 ஜூலை 31 வரை நடைமுறையில் இருக்கும் இத்திட்டத்தின் கீழ், முதன்முதலாகப் பணியில் சேர்ந்து பி.எப். கணக்குத் தொடங்கும் புதிய தொழிலாளருக்கு தலா 15,000 ஆயிரம் ரூபாய் (இரண்டு தவணைகளாக) மானியம் வழங்கப்படுகிறது.
அதேபோல், புதிய தொழிலாளர்களை உருவாக்கும் தொழிற்சாலை களுக்கும் நான்கு ஆண்டுகள் வரை மாதம் தலா 3,000 ஆயிரம் ரூபாய் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர் அபிஷேக் ரஞ்சன் பேசுகையில், ஒட்டுமொத்த கோவை மண்டலத்தில் தொழிலாளர்களுக்கு 20 கோடி ரூபாயும், தொழிற்சாலைகளுக்கு 63 கோடி ரூபாயும் மானியமாக விடுவிக்கப்படும் என்றார்.
போலீஸ் துணை கமிஷனர் ராஜராஜன், மாநகராட்சி உதவி கமிஷனர் பார்த்தசாரதி, ஏ.வி.பி. கல்விக்குழும சேர்மன் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
