ADDED : ஜூலை 20, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி : காமராஜர் கல்வி அறக்கட்டளையின் சார்பில், காமராஜர் பிறந்த நாளையொட்டி, திருமுருகன்பூண்டி, அம்மாபாளையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்பின், அவிநாசி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பொது தேர்வுகளில், அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்த முதல் மூன்று மாணவர்களுக்கும், மாணவியர்களுக்கும் கல்வி ஊக்க பரிசு, ரொக்க பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் இந்துமதி தலைமை தாங்கினார். அறக்கட்டளை தலைவர் நடராஜன், அரசு கல்லுாரி தமிழ் துறை தலைவர் மணிவண்ணன் ஆகி யோர் பேசினர். பொருளாளர் அப்புசாமி, தமிழ்நாடு பணி நிறைவு ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் சுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.