/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயறு வகை உற்பத்தி விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு
/
பயறு வகை உற்பத்தி விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு
ADDED : மார் 05, 2026 06:26 AM
உடுமலை: வேளாண்மை துறை சார்பில், பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை:
உளுந்து, பாசிப்பயறு, துவரை மற்றும் காராமணி பயறுவகைப் பயிர்களின் உற்பத்தியை பெருக்கி, பயறு வகை உற்பத்தியில் தன்னிறைவடையும் நோக்கில், வேளாண்மை துறை சார்பில், பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், பயறு வகை உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் திருப்பூர் உட்பட செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலுார், கரூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் அறுவடை பின்செய் நேர்த்தி இயந்திரங்கள் அமைக்க, 33 சதவீதம் மானியத்தில், அதிகபட்சம், 25 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனிநபர் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். தகுதியுள்ள பயனாளிகள், வேளாண்மை துணை இயக்குனர் வேளாண் விற்பனை மற்றம் வணிகத்துறை அணுகி பயன் பெறலாம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

