/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சந்திப்பு பகுதியில் விபத்து அதிகரிப்பு
/
சந்திப்பு பகுதியில் விபத்து அதிகரிப்பு
ADDED : ஜூலை 03, 2025 08:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை-பல்லடம் மாநில நெடுஞ்சாலை, செஞ்சேரிமலை ரோடு சந்திப்பு பகுதி ஏரிப்பாளையத்தில் அமைந்துள்ளது. அங்கு மாநில நெடுஞ்சாலை அபாய வளைவுடன் அமைந்துள்ளது.
இதனால், செஞ்சேரிமலை ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், மாநில நெடுஞ்சாலையில் இணையும் போது விபத்துகள் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அப்பகுதியில், முன்பு, பிளிக்கிரிங் சிக்னல் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது சிக்னல் மாயமாகி விட்டது.
இதனால், சந்திப்பு பகுதியில், நெரிசல் அதிகரித்துள்ளது. மீண்டும் சிக்னல் அமைத்து, வளைவை மேம்படுத்த வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.