/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொழுமம் ரோட்டில் விபத்து அதிகரிப்பு
/
கொழுமம் ரோட்டில் விபத்து அதிகரிப்பு
ADDED : பிப் 16, 2024 12:45 AM
உடுமலை;உடுமலை நகரில், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் கொழுமம் ரோட்டில், போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.
பழநி உட்பட பகுதிகளுக்கு, மாற்றுப்பாதையாகவும் இந்த ரோடு அமைந்துள்ளதால், கனரக போக்குவரத்தும் கூடுதலாகியுள்ளது.
இந்நிலையில், ரயில்வே கேட் முதல் எஸ்.வி., புரம் பாலம் வரை, நெரிசல் அதிகரித்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கு ரோட்டோரத்தில், தற்காலிக ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது முக்கிய காரணமாகியுள்ளது.
மேலும், கணக்கம்பாளையம் குடியிருப்புகளில் இருந்து வரும் இணைப்பு ரோட்டில், தாறுமாறாக வரும் வாகனங்களால், விபத்துகள் ஏற்படுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வாக, தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றி, நெரிசல் அதிகம் ஏற்படும் பகுதியில், டிவைடர் வைக்க வேண்டும்.
ரோட்டோரத்தில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்த, தடை விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.