/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கேரட் விலை உயர்வு; வெங்காயம் விலை சரிவு
/
கேரட் விலை உயர்வு; வெங்காயம் விலை சரிவு
ADDED : பிப் 12, 2024 01:07 AM
திருப்பூர்;நீலகிரி மாவட்டத்தில் இருந்து திருப்பூர் - தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு வரும், கேரட், பீட்ரூட் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 40 முதல், 60 ரூபாய் இருந்த கேரட் விலை, 80 ரூபாயாகி விட்டது. பீன்ைஸ, (கிலோ, 70 ரூபாய்) விட கேரட் விலை உயர்ந்திருப்பது இதுவே முதல்முறை என்கின்றனர், வியாபாரிகள். ஊட்டி பீன்ஸ் கிலோ, 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
உருளைக்கிழங்கு விலை குறைந்து, 28 ரூபாய், முள்ளங்கி கிலோவுக்கு, பத்து ரூபாய் உயர்ந்து, 40 ரூபாய். பீர்க்கன்காய் - 70, பாகற்காய் - 70, அவரைக்காய் - 60, பவானி கத்தரி - 90, புடலங்காய் - 55, வெண்டைக்காய் - 60 ரூபாய்.
கடந்த பத்து நாட்களாக, சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்றுமுன்தினம், கிலோ, 28 ரூபாய்க்கும், 24 கிலோ கொண்ட சிறிய மூட்டை, 500 முதல், 600 ரூபாய்க்கும் சின்ன வெங்காயம் மொத்த விலையில் விற்பனையானது. பெரிய வெங்காயம், 25 ரூபாய். தக்காளி, 14 கிலோ சிறிய டிரே, 300 ரூபாய். மொத்த விலையில் ஒரு கிலோ, 22 ரூபாய்; சில்லறை விலையில், 25 ரூபாய்.
வியாபாரிகள் சிலர் கூறுகையில், 'முகூர்த்தம் சீசன் இல்லாத பொழுதும், காலநிலை மாற்றத்தால் வரத்து குறைந்துள்ளது. விற்பனை குறைவாக இருந்த போதும், வரும் காய்கறி அளவே குறைவு என்பதால், விலை உயர்ந்துள்ளது. வரும் வாரத்தில் வரத்து அதிகரித்தால், காய்கறி விலை குறையும்,' என்றனர்.