/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
/
ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : ஆக 07, 2025 09:11 PM
உடுமலை; உடுமலை வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
உடுமலை நகரில், பசுபதி வீதி, சீனிவாசா வீதி, வ.உ.சி., வீதி, கல்பனா ரோடு, ராஜேந்திரா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள் அதிகம் உள்ளன. அத்தியாவசிய பொருட்கள, ஆடை, உட்பட பல்வேறு வணிக பொருட்கள் விற்பனை நடக்கிறது.
இந்த பகுதிகள், நகரின் மையமாகவும் இருப்பதால், பிரதானமான வழித்தடமாகவும் உள்ளன. நாள்தோறும், ஆயிரக்கணக்கான வாகன ஓட்டுனர்கள் மற்றும் பாதசாரிகள் அப்பகுதிகளை கடந்து செல்கின்றனர். தற்போது வணிக கடைகளின் ஆக்கிரமிப்பால் அப்பகுதியில் தொடர்ந்து நெரிசல் ஏற்படுகிறது.
வாகனங்கள் நிறுத்துவதற்கு ரோட்டோரத்தில் விடப்பட்டுள்ள இடைவெளியை, பல வணிக கடைகளில், பொருட்களை வைத்துக்கொள்வதற்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். இதனால், வாகன ஓட்டுனர்கள் ரோட்டை மறித்து வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.
சில பகுதிகளில் வணிக கடைகளின் பொருட்களை ரோடு வரை அடுக்கி கொள்வதால், சரக்கு வாகனங்கள் அல்லது கார் போன்ற வாகனங்கள் எதிரெதிரே வரும்போது ஒதுங்கி செல்ல வழியில்லாமல், நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுகுறித்து நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.