/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்டில் பயணியர் வருகை அதிகரிப்பு
/
பஸ் ஸ்டாண்டில் பயணியர் வருகை அதிகரிப்பு
ADDED : ஜன 16, 2025 05:50 AM

உடுமலை : பொங்கல் விடுமுறை காரணமாக, உடுமலை பஸ் ஸ்டாண்டில், பயணியர் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.
பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக, சொந்த ஊர்களுக்கு செல்ல பயணியர் அதிகளவு உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு வந்திருந்தனர்.
திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, பழநி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் மட்டுமின்றி, சுற்றுப்புற கிராமங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
பொங்கல் விடுமுறைக்கு என சிறப்பு பஸ்கள் குறைந்தளவு இயக்கப்பட்டதோடு, சுற்றுப்புற கிராமங்களுக்கு வழக்கமாக இயங்கப்படும் பஸ்களும், குறைக்கப்பட்டதால், பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதோடு, பல மணி நேரம் காத்திருந்து பஸ்களில் ஏறி சென்றனர்.

