/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண் பானைகள் விற்பனை ஜோர்; வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
/
மண் பானைகள் விற்பனை ஜோர்; வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
மண் பானைகள் விற்பனை ஜோர்; வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
மண் பானைகள் விற்பனை ஜோர்; வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
ADDED : பிப் 18, 2025 09:53 PM

உடுமலை ; வெயிலின் தாக்கம் முன்னதாகவே துவங்கியுள்ளதால், உடுமலையில் மண் பானை விற்பனை அதிகரித்துள்ளது.
உடுமலை பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், வெயிலுக்கு, இயற்கையான, குளிர்ச்சியான குடிநீர் வழங்கும், மண் பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது.
தண்ணீர் பானைகள், கூஜா, ஜாடி, உருண்டை வடிவம், பழைய செம்பு பானை வடிவத்திலான மண் பானை, குழாய் பொருத்திய மண் பானை என பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
சிறிய அளவிலான பானைகள், 50, 100 ரூபாய்க்கும், 10 லிட்டர் முதல் 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட பானைகள், வடிவம், கொள்ளளவு அடிப்படையில், 200 ரூபாய் முதல், 600 ரூபாய் வரை விற்று வருகிறது.
மண்பானை விற்பனையாளர்கள் கூறுகையில், 'வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வீடு, அலுவலகம், நிறுவனங்களுக்கு என, பொதுமக்கள் மண் பானைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தினமும் நுாறு பானைகள் வரை விற்பனையாகிறது,' என்றனர்.