/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறப்பு பஸ்களில் அதிகரித்த கூட்டம்
/
சிறப்பு பஸ்களில் அதிகரித்த கூட்டம்
ADDED : ஜன 22, 2024 01:06 AM

திருப்பூர்;வெளியூர் சென்று விட்டு திருப்பூர் திரும்பியவர்களால், சிறப்பு பஸ்களில் திடீரென கூட்டம் அதிகரித்தது.
பொங்கல் பண்டிகைக்கு பின், பிற மாவட்டங்களுக்கு சென்றவர்கள், திருப்பூர் திரும்ப ஏதுவாக, 20 மற்றும், 21ம் தேதி, 70 சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. பொங்கல் முடிந்து, 18ம் தேதியே பள்ளி, கல்லுாரிகள் செயல்பட துவங்கினாலும், மாணவ, மாணவியர் வருகை குறைவாகவே இருந்தது. பனியன் நிறுவனங்கள் முழு அளவில் இயங்கவில்லை.
இந்நிலையில், பொங்கல் பண்டிகை முடிந்து, ஒரு வாரம் கழித்து இன்று முதல் முழுமையாக செயல்பட உள்ளன. நேற்று காலை முதல் இரவு வரை சிறப்பு பஸ்களில் கூட்டம் அதிகரித்திருந்தது. தென்மாவட்டங்களில் இருந்து கோவில்வழி வந்த பஸ்களில் அதிகளவில் வந்திறங்கினர்.