/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலப்பின பசுக்களுக்கு கருச்சிதைவு அதிகரிப்பு
/
கலப்பின பசுக்களுக்கு கருச்சிதைவு அதிகரிப்பு
ADDED : மே 13, 2025 11:41 PM
பொங்கலுார் : விவசாய நிலங்களில் உள்ள மரங்கள் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. வாகனம், தொழிற்சாலை புகையால் வளிமண்டலம் சூடாகி வருகிறது. உயிர்வேலிகளை அழித்து கம்பிவேலி அமைப்பது அதிகரித்துள்ளது. இதனால், கால்நடைகளுக்கு ஒதுங்கக்கூட நிழல் இல்லாமல் போய்விடுகிறது.
எனவே, வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கிறது. இதற்கு தாக்கு பிடிக்க முடியாமல் கலப்பின பசு மாடுகளில் கணிசமான அளவு கருச்சிதைவு ஏற்படுவது அதிகரித்துள்ளது. இது கால்நடை விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், கால்நடைகளை நம்பி பிழைப்பு நடத்தும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கால்நடை துறையினர் கூறுகையில், 'ஒரு சில கால்நடைகளுக்கு கருச்சிதைவு ஏற்படலாம். அதிக வெப்பத்தால் கால்நடைகள் இறக்கும் வாய்ப்பு கூட உண்டு. காலை, 10:00 மணி முதல்,3:00 மணி வரை மேய்ச்சலுக்கு அனுப்ப கூடாது.
மாடுகளை நிழலில் கட்டுவது, நான்கைந்து முறை தண்ணீர் குடிக்க வைப்பது, கொட்டகையைச் சுற்றிலும் நிழல் தரும் மரங்களை நடுவது, கொட்டகையின் மேல் தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் தெளிப்பது போன்றவற்றை செய்து வெப்பத்திலிருந்து கால்நடைகளை பாதுகாக்க வேண்டும்,' என்றனர்.