ADDED : மே 06, 2025 06:35 AM
அ நிறம் | அளவு
அமராவதிபாளையத்தில் நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு, 900 மாடுகள் வந்தன. இது கடந்த வாரத்தை விட அதிகம். கன்றுகுட்டி, 2,500 - 4,000 ரூபாய், காளை 20 ஆயிரம் - 27 ஆயிரத்து, 500 ரூபாய், எருமை, 26 ஆயிரம் - 30 ஆயிரம் ரூபாய், மாடு, 28 ஆயிரம் - 32 ஆயிரம் ரூபாய் என விற்கப்பட்டது. கடந்த வாரத்தை விட காளை, எருமை விலை உயர்ந்தது; மாடு, கன்று விலை உயரவில்லை.
நேற்று மாடுகள் வரத்து சற்று உயர்ந்த நிலையில், மாடுகளை வாங்க கேரள வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்ததால், 1.20 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக, சந்தை ஒருங்கிணைப் பாளர்கள் தெரிவித்தனர்.
