/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாலை நேர புறநோயாளிகள் பிரிவு; மருத்துவமனையில் பெருகும் வரவேற்பு
/
மாலை நேர புறநோயாளிகள் பிரிவு; மருத்துவமனையில் பெருகும் வரவேற்பு
மாலை நேர புறநோயாளிகள் பிரிவு; மருத்துவமனையில் பெருகும் வரவேற்பு
மாலை நேர புறநோயாளிகள் பிரிவு; மருத்துவமனையில் பெருகும் வரவேற்பு
ADDED : ஜன 03, 2026 06:03 AM
திருப்பூர்: திருப்பூர், 15 வேலம்பாளையம் அரசு மருத்துவமனை கடந்த, 2025 ஆக. மாதம் திறக்கப்பட்டது. அனுப்பர்பாளையம் புதுார், அனுப்பர்பாளையம், டி.டி.பி. மில்ரோடு, வேலம்பாளையம், சோளிபாளையம், அமர்ஜோதி கார்டன், சொர்ணபுரி அவென்யூ, சொர்ணபுரி ரிச்லேண்ட் உள்ளிட்ட குடியிருப்புகளுக்கு மத்தியில் இம்மருத்துவமனை உள்ளது.
நோயாளிகள் வசதிக்காக, மாலை 3:00 முதல், 5:00 மணி வரை மாலை நேர ஓ.பி. செயல்படுகிறது. துவக்கத்தில் பலருக்கு இவ்விஷயம் தெரியாததால், காலை, 8:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை கூட்ட நெரிசலில், வந்து, காத்திருந்து சிகிச்சை பெற்று சென்றனர்.
குழந்தைகள், வயதானவர்கள் காத்திருப்பு சிரமங்களை தவிர்க்க மாலையில் வரலாம் என அரசு டாக்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனால், மாலை நேர ஓ.பி.க்கு வருவோர் எண்ணிக்கை 35 - 55 ஆக அதிகரித்துள்ளது. ஒரு சிறப்பு டாக்டர், இரண்டு டாக்டர்கள், ஆறு செவிலியர் மாலையில் பணிபுரிகின்றனர். கடந்த செப். முதல் டிச. வரையிலான, நான்கு மாதத்தில், 3,512 பேர் மாலை நேர புறநோயாளிகள் பிரிவில் பயன் பெற்றுள்ளனர்.
அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், 'மாலை நேரத்தில், சளி, காய்ச்சல் தொந்தரவுகளுக்கு குழந்தைகளை பலரும் அழைத்து வருகின்றனர். குழந்தைகள் டாக்டர், சிறப்பு டாக்டர் பணியில் இருப்பதால், அரைமணி நேரத்தில் டாக்டரை பார்த்து, தேவையான மருந்து, மாத்திரைகளை வாங்கிச் செல்ல முடியும். இணைநோய் மற்றும் எதிர்ப்பு சக்தி குறைவு காரணமாக தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்வோர், மருந்து, மாத்திரை வாங்க மாலை நேரத்தில் வந்தால், நெரிசல் இல்லாமல், டாக்டரை பார்த்து விட்டுச் செல்ல முடியும்,' என்றனர்.

