ADDED : ஜன 23, 2025 11:49 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்; நகர மற்றும் கிராம ஊராட்சிப் பகுதிகளில் கொசு உற்பத்தி அதிகரித்திருக்கிறது.
டெங்கு மற்றும் காய்ச்சல் பரவலும் இருந்து வருகிறது. வரும், 26ம் தேதி கிராம ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம் நடக்கிறது.
இதில், கொசுக்கள் வாயிலாக பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதித்து, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கிராம ஊராட்சிகளின் தனி அலுவலர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
பொதுவாக, கிராமங்களில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் என்பது, மக்கள் தொகைக்கேற்ப இல்லை. சமீபத்தில் பெய்த மழையில், கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.
எனவே, கூடுதலாக கொசு ஒழிப்பு பணியாளர்களை பணியமர்த்தி, சுழற்சி முறையில், கொசு மருந்து தெளிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே, ஊராட்சி மக்களின் எதிர்பார்ப்பு.
