ADDED : ஜூலை 21, 2025 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்; பொங்கலுார் வட்டார கிராம மக்களுக்கு நிலத்தடி நீரே குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. அத்திக்கடவு குடிநீர் மாதத்துக்கு ஒருமுறை வருவதே அதிசயம். இவ்வாறு குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ஊராட்சிகளில் தலைவர் பதவிக்காலம் முடிந்ததால், ஊராட்சி செயலாளர்களே நிர்வாகத்தை கவனித்து வருகின்றனர். நாள்தோறும் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பொதுமக்கள் குடிநீர் கேட்டு நச்சரித்து வருகின்றனர். வடகிழக்கு பருவ மழை துவங்க இன்னும் இரண்டு மாதம் உள்ளது. இதனால், தண்ணீர் தட்டுப்பாடு மேலும் தீவிரமடையும். பொதுமக்கள் போராட ஆரம்பித்தால் என்ன செய்வது என்று ஊராட்சி நிர்வாகங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளன.