UPDATED : ஆக 15, 2026 10:13 PM
ADDED : ஆக 15, 2026 10:02 PM
திருப்பூர்:சுதந்திர தினத்தையொட்டி அறநிலையத்துறை கோவில்களில், சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. சாமளாபுரம் கிராமம், வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலில் நடந்த சமபந்தியில், கலெக்டர் மனிஷ் நாரணவரே பங்கேற்றார்.
டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமிகோவில் விருந்தில் பங்கேற்றார். திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நடந்த சமபந்தியில், ஆர்.டி.ஓ., சிவபிரகாஷ் பங்கேற்று, பொதுமக்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். செயல் அலுவலர் வனராஜா மற்றும் பணியாளர்கள், பொதுமக்களுக்கு உணவை பரிமாறினர். சுதந்திர தினவிழாவையொட்டி, மாவட்டத்தில் உள்ள, 18 கோவில்களில் நேற்று சமபந்தி விருந்து நடந்தது. அரசுத்துறை அதிகாரிகள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை,அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.
---
திருப்பூர், விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் சமபந்தி விருந்து நடந்தது.
