/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தனி அலுவலர் கண்காணிப்பு ஊராட்சி மக்களுக்கு சிக்கல்
/
தனி அலுவலர் கண்காணிப்பு ஊராட்சி மக்களுக்கு சிக்கல்
தனி அலுவலர் கண்காணிப்பு ஊராட்சி மக்களுக்கு சிக்கல்
தனி அலுவலர் கண்காணிப்பு ஊராட்சி மக்களுக்கு சிக்கல்
ADDED : பிப் 12, 2025 12:25 AM
திருப்பூர்; கிராம ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவுற்ற நிலையில், ஊராட்சி துணை பி.டி.ஓ.,க்கள் தனி அலுவலர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
'கிராம ஊராட்சிகள், அடிப்படை தேவையில் தன்னிறைவு பெற வேண்டும்' என்பது, மத்திய அரசின் உத்தரவு; இதையே தான் மாநில அரசும் வழிகாட்டுகிறது.அந்த வகையில் தடையற்ற குடிநீர் நிர்வாகம், மின்சாரம், கால்வாய் சுத்தம் செய்வது, குப்பை தேங்காமல் அகற்றுவது போன்ற பணிகள், அன்றாடம் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது.
கிராம ஊராட்சிகளை பொறுத்தவரை குப்பை அகற்றும் பணியும், திடக்கழிவு மேலாண்மை பணியும் தான் சவால் நிறைந்ததாக மாறியிருக்கிறது.
சாலையோரம், குளம், குட்டைகளில் தான் குப்பைகள் கொட்டப்படுகின்றன; குப்பைகளை எரியூட்டக்கூடாது என, அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், பெரும்பாலான ஊராட்சிகளில் இரவு நேரங்களில், குப்பை எரியூட்டப்படுகிறது. இதனால், சாலை முழுக்க, புகை மண்டலமாக மாறுகிறது.
வாகனங்களில் செல்வோர் மற்றும் பாதசாரிகள் புகையை நுகரும் போது, அவர்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படுகிறது.
இதுபோன்று, தங்கள் குடியிருப்பு பகுதியில் நிலவும் பிரச்னைகளை வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி தலைவர்களின் கவனத்துக்கு, மக்கள் கொண்டு சென்ற நிலையில், தற்போது, ஊராட்சிகளை நிர்வாகிக்கும் அதிகாரிகளின் கவனத்துக்கு தான் பிரச்னைகளை கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
நியமிக்கப்படும் தனி அலுவலர்கள் யார் என்று, பலருக்கும் தெரியாத நிலையில், அதிகாரிகளின் பெயரை தெரியப்படுத்த வேண்டும் என்பது, ஊராட்சி மக்களின் எதிர்பார்ப்பு.