/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடைகளுக்கு தடுப்பூசி அவசியம் : வேளாண் கருத்தரங்கில் தகவல்
/
கால்நடைகளுக்கு தடுப்பூசி அவசியம் : வேளாண் கருத்தரங்கில் தகவல்
கால்நடைகளுக்கு தடுப்பூசி அவசியம் : வேளாண் கருத்தரங்கில் தகவல்
கால்நடைகளுக்கு தடுப்பூசி அவசியம் : வேளாண் கருத்தரங்கில் தகவல்
ADDED : நவ 04, 2025 09:03 PM

உடுமலை: உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில், வேளாண்துறை சார்பில், வேளாண் கருத்தரங்கம் நடந்தது.
வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி வரவேற்றார். கால்நடை மருத்துவர் ராஜசெல்லப்பன் பேசியதாவது:
நமது பகுதியில், வளர்க்கப்படும் கால்நடைகளில், கோமாரி, அம்மை மற்றும் உண்ணிக்காய்ச்சல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதில், கோமாரி மற்றும் அம்மை நோயை தடுக்க அரசால் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.
கிராமந்தோறும் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களை, கால்நடை வளர்ப்போர் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இத்தகைய நோய்களால், கடந்தாண்டு இப்பகுதியில் மட்டும், 63 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. எனவே தடுப்பூசி செலுத்துவது அவசியமாகும்.
உண்ணிக்காய்ச்சல் மற்றும் மடிநோய் தாக்குதல் தென்பட்டால் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் கிளை நிலையங்களை கால்நடைகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பது அவசியமாகும். இவ்வாறு, அவர் பேசினார்.
வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேல், இயற்கை வேளாண்மை முறைகள் குறித்து விளக்கமளித்தார்.
பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் துக்கையண்ணன், மக்காச்சோள சாகுபடியில், படைப்புழு தாக்குதல் கட்டுப்பாடு குறித்தும், ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் தவப்பிரகாஷ், தென்னையில் வாடல் நோய், கரும்பு சாகுபடி குறிப்புகள் குறித்து பேசினர்.
முன்னாள் வட்டார வேளாண் இயக்குனர் மகாலிங்கம் சிறுதானியங்கள் சாகுபடி மற்றும் பயன்பாடு குறித்து பேசினார். உடுமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் பங்கேற்றனர்.

