/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெற் பயிரில் பூச்சி நோய் மேலாண்மை வேளாண் அதிகாரிகள் தகவல்
/
நெற் பயிரில் பூச்சி நோய் மேலாண்மை வேளாண் அதிகாரிகள் தகவல்
நெற் பயிரில் பூச்சி நோய் மேலாண்மை வேளாண் அதிகாரிகள் தகவல்
நெற் பயிரில் பூச்சி நோய் மேலாண்மை வேளாண் அதிகாரிகள் தகவல்
ADDED : ஜன 07, 2025 10:53 PM
உடுமலை; நெற் பயிரைத்தாக்கும் பல்வேறு வகையான பூச்சி நோய்களை கட்டுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து, மடத்துக்குளம் வேளாண் உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு பூச்சி நோய் மேலாண்மை தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கம் அறித்துள்ளார்.
மடத்துக்குளம் வட்டாரத்திற்குட்பட்ட, 18 வருவாய் கிராமங்களில், அமராவதி பாசன பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், அமராவதி புதிய ஆயக்கட்டு பகுதிகளில் நாற்றங்கால் விடும் பணிகள் துவங்கி, நடவுப்பணிகளுக்கு தயராக உள்ளது.
நெற்பயிரில் பொருளதார சேதத்தை ஏற்படுத்தும் பூச்சிகளை கட்டுபடுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்து, மடத்துக்குளம் வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:
நெற்பயிரில், தண்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த, அதிகப்படியான தழைச்சத்து உரங்களை அளிப்பதை குறைத்து, வேளாண் துறையால் பரிந்துரைக்கப்பட்ட உரங்களை மட்டுமே பயிருக்கு அளிக்க வேண்டும்.
தண்டுப்புழு தாக்குதலை குறைக்க, குளோரோனிப்ரோல் 18.5 சதவீதம் எஸ்.சி., மருந்தை, ஏக்கருக்கு 60 மில்லி அல்லது குளோரன்ட்ரலிப்ரோல் 0.4 சதவீதம், ஏக்கருக்கு, 4 கிலோ அல்லது கார்போசல்பான் 25 சதவீதம் இஜி., ஏக்கருக்கு 350 முதல், 400 மில்லி தெளிப்பு செய்து கட்டுப்படுத்தலாம்.
அல்லது டிரைக்கோகேர்மா ஜப்பானிக்கம் முட்டை ஒட்டுண்ணி, 2 சிசி., ஏக்கருக்கு பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.
நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழுவை கட்டுபடுத்த, அசிப்பேட் 75 சதவீதம் எஸ்.பி., மருந்து, ஏக்கருக்கு 250- முதல் 400 மில்லி அல்லது பிப்ரோனில் 80 சதவீதம் டபிள்யூ - ஜி, ஏக்கருக்கு 20 முதல் -25 கிராம் அல்லது புளுபென்டமைடு 30.35 சதவீதம் எஸ்.ஜி., ஏக்கருக்கு, 20 கிராம் அல்லது பாசலோன் 35 சதவீதம் இ.ஜி., ஏக்கருக்கு, 600 மில்லி அல்லது தயோமித்தாசிம் 25 சதவீதம் டபிள்யூ - ஜி., ஏக்கருக்கு 40 கிராம் அளவில் தெளிப்பு செய்து கட்டுப்படுத்தலாம். மேற்கண்ட ஏதேனும் ஒரு மருந்தை பரிந்துரை செய்யப்பட்ட அளவு மட்டுமே, தெளிப்பு செய்ய வேண்டும்.
மேலும், தொடர் மழை மற்றும் வெப்பநிலை குறைவாகவும், மந்தமான சூரிய வெளிச்சம் இருப்பதால், நெற்பயிரை புகையான் பூச்சிகள் தாக்க வாய்ப்பு உள்ளது.
இந்த பூச்சிகள் இளநிலை பருவங்களிலும், வளர்ந்த பூச்சிகள் நெற்பயிரின் துார்களிகளிலும், தங்கி தனது ஊசி போன்ற, வாயால் சாற்றை உறிஞ்சி, வட்ட வடிவில் திட்டு திட்டாக காயத்தொடங்கி, பிறகு வயல் முழுவதும் வாடிக் காய்ந்துவிடும்.
முதுநிலையடைந்த தாய்ப்பூச்சிகள், 200 முதல் -300 முட்டைகள் வரை இலைக்குள் இட்டு அதிக எண்ணிக்கையில் பரவுகிறது. இதனை குறைக்க, சூரிய விளக்கு பொறி அமைத்து, புகையான் பூச்சிகள் நடமாட்டத்தை கண்காணித்து அழிக்கலாம்.
மேலும், பயிருக்கு தேவையை விட கூடுதலாக நீர் பாய்ச்சுவதை குறைப்பதன் வாயிலாக, நாற்றுப்பருவத்தில் புகையான் பூச்சியின் தாக்குதலை குறைக்கலாம்.
வயலில் புகையான் பூச்சி தாக்குதல் தெரியவந்தால், அதிகப்படியான தழைச்சத்து உரங்களை அளிப்பதை குறைக்க வேண்டும். மேலும், பிவேரியா பேசியானா அல்லது மெட்டாரைசியம் இனிசோபிலே உயிரியல் பூஞ்சை கொல்லியை, ஒரு ஹெக்டேருக்கு, 2 கிலோ பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.
அல்லது, ஒரு ஏக்கருக்கு, அசிடாமைடு, 20 எஸ்.பி., 20 கிராம், அசிபேட் 75 சதவீதம் எஸ்.பி., 400 கிராம், அசாடிராக்டின் 400 மில்லி இதில் ஏதேனும் ஒரு மருந்தை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு, மடத்துக்குளம் வேளாண் உதவி இயக்குநர் தெரிவித்தார்.