தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சிறுபான்மையினர் பகுதியில் உள்கட்டமைப்பு மேம்பாடு: பா.ஜ. வேட்பாளர் தங்கராஜ் உறுதி

சிறுபான்மையினர் பகுதியில் உள்கட்டமைப்பு மேம்பாடு: பா.ஜ. வேட்பாளர் தங்கராஜ் உறுதி

சிறுபான்மையினர் பகுதியில் உள்கட்டமைப்பு மேம்பாடு: பா.ஜ. வேட்பாளர் தங்கராஜ் உறுதி


ADDED : ஏப் 17, 2026 08:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 08:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: ''சிறுபான்மையின மக்கள் மீது அக்கறை செலுத்தி, தொகுதியில் அவர்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகள் உடனுக்குடன் செய்யப்படும்,'' என்று கூறி, தெற்கு தொகுதி பா.ஜ. வேட்பாளர் தங்கராஜ் தீவிரமாக ஓட்டு சேகரித்தார்.

திருப்பூர் தெற்கு தொகுதி பா.ஜ. வேட்பாளர் காடேஸ்வரா தங்கராஜ், அ.தி.மு.க. - அ.ம.மு.க. - த.மா.கா. - பா.ம.க. உட்பட கூட்டணி கட்சியினருடன் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, புதுப்பாளையம், சென்னிமலைபாளையம், செந்தில் நகர், எம்.ஜி.ஆர். நகர், காளிபாளையம், குப்பாண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பொதுமக்கள் வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். தங்களது பகுதியில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து தெரிவித்தனர். அனைத்தையும் கேட்டறிந்த வேட்பாளர், மக்கள் நலன் மீதான திட்டங்கள் மீது அக்கறை செலுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

பெரிய கடை வீதியில் உள்ள பெரிய பள்ளி வாசலில் இஸ்லாமியர்களிடம் கூட்டணி கட்சியினருடன் சென்று, இஸ்லாமிய மக்களிடம் தாமரை சின்னத்தில் ஓட்டளித்து, ஆதரவை தர வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, அவர்கள் மத்தியில் வேட்பாளர் தங்கராஜ், வார்டு பகுதியில் செய்ய வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள், அதில் செலுத்தப்பட வேண்டிய கவனம் குறித்து விளக்கினார். முன்னதாக வேட்பாளர் தங்கராஜை, இஸ்லாமியர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

அப்பகுதியில் பிரசாரத்தின் போது, வேட்பாளர் தங்கராஜ் மேலும் பேசியதாவது: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நிலவும் குப்பை பிரச்னைக்கு தீர்வு செய்யப்படும். கடந்த, ஐந்து ஆண்டுகளாக நான் கவுன்சிலராக எனது வார்டில் உள்ள குடிநீர், சாக்கடை கால்வாய், குப்பை என, ஒவ்வொரு விஷயத்திலும் கூடுதல் கவனம் கொடுத்து செய்தேன். தற்போது, வேட்பாளராக தொகுதியில் களமிறங்கியுள்ளேன். மக்களின் பிரதான பிரச்னைகள் மீது கவனம் செலுத்தி, சகோதரத்துவத்துடன் தங்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.

சிறுபான்மை மக்கள் மீது அக்கறை கொண்டு, அவர்களின் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய பா.ஜ. அரசு செய்து வருகிறது. நாங்கள் மத ரீதியாக எந்த பாகுபாடும் பார்த்ததில்லை. எனவே, சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர், சாக்கடை, ரோடு, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து கவனம் செலுத்தி தீர்வு செய்யப்படும். உங்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மேலும், மாணவ, மாணவியர் மீது கவனம் செலுத்தி, பொறியியல் படிக்க வசதியாக, தெற்கு தொகுதி பகுதியில் அரசு பொறியியல் கல்லுாரி அமைக்க, 100 சதவீத முயற்சி மேற்கொள்வேன்.

இவ்வாறு, அவர் பேசினார்.

வேட்பாளருடன் முன்னாள் மேயர் விசாலாட்சி மற்றும் பா.ஜ. கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர்.

----

திருப்பூர் பெரிய பள்ளிவாசல் முன்பு இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்த தெற்கு தொகுதி பா.ஜ. வேட்பாளர் காடேஸ்வரா தங்கராஜ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us