/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடை வளர்ப்போர் தொழில்நுட்ப குழு துவக்கம்
/
கால்நடை வளர்ப்போர் தொழில்நுட்ப குழு துவக்கம்
ADDED : செப் 27, 2024 11:20 PM

உடுமலை: ராமச்சந்திராபுரம் கிராமத்தில், கால்நடை வளர்ப்போர் தொழில்நுட்ப குழுவின் துவக்க விழா நேற்று நடந்தது.
உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், கால்நடை தொழில்நுட்ப தகவல் மையம் பெதப்பம்பட்டியில் செயல்பட்டு வருகிறது.
இந்த மையம் சார்பில், ராமச்சந்திராபுரம் கிராமத்தில், கால்நடை வளர்ப்போரை உள்ளடக்கிய, தொழில்நுட்ப குழு உருவாக்கப்பட்டு, நேற்று துவக்க விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் குமாரவேல் தலைமை வகித்தார்.
வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா, கனரா வங்கி மேலாளர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தனர். பாலில் இருந்து கொழுப்பு பிரித்தெடுக்கும் இயந்திரம் கிராம கால்நடை தொழில்நுட்ப குழுவுக்கு வழங்கப்பட்டது.
மேலும், நறுமண பால் தயாரிப்பு, கால்நடைகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவம் மற்றும் சைலேஜ் தயாரிப்பு குறித்த செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. குழுவை சேர்ந்த, 52 கால்நடை வளர்ப்போர் பங்கேற்று பயன்பெற்றனர்.
மேலும், கால்நடை மருத்துவ கல்லுாரி மூன்றாம் ஆண்டு மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.