ADDED : அக் 28, 2024 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை அருகே, காயங்களுடன் பறக்க முடியாமல் தவித்த கழுகு குஞ்சு மீட்கப்பட்டு, வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
உடுமலை கண்ணமநாயக்கனுார் விவசாயி செல்வராஜ், மல்பெரி தோட்டத்தில் கழுகு குஞ்சு காயமடைந்த நிலையில் பறக்க முடியாமல் இருப்பதை கண்டுள்ளார். உடனடியாக, அதனை மீட்டு, உடுமலை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
டாக்டர் சுகன்யா, கழுகு குஞ்சுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தார். தொடர்ந்து, உடுமலை வனத்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இறக்கை சரியாகும் வரை கண்காணிக்கப்பட்டு, வனத்தில் விடப்படும், என, வனத்துறையினர் தெரிவித்தனர்.