/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காயமடைந்த புள்ளி மான் வனத்துறை மீட்டு சிகிச்சை
/
காயமடைந்த புள்ளி மான் வனத்துறை மீட்டு சிகிச்சை
ADDED : மார் 21, 2025 02:03 AM

பல்லடம்,: பல்லடம் அருகே காயமடைந்த புள்ளிமானை மீட்டு வனத்துறையினர் சிகிச்சைக்கு எடுத்துச் சென்றனர்.
பல்லடம் -- திருப்பூர் ரோடு, குங்குமபாளையம் பிரிவு அருகே, நேற்று காலை, இரண்டரை வயதான புள்ளிமான் ஒன்று காயங்களுடன் ரோட்டில் துள்ளிக்குதித்து ஓடியது. இவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், வனத்துறை மற்றும் பல்லடம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறை மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், வலை வீசி மானை பிடித்தனர். தொடர்ந்து, காயமடைந்த மானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, கூடுதல் சிகிச்சைக்காக வனத்துறையினர் மானை எடுத்துச் சென்றனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கோடை காலம் என்பதால், உணவு மற்றும் தண்ணீருக்காக, மான்கள் வழி தவறிச் செல்வது வழக்கம். அவ்வகையில், அவிநாசி அருகேயுள்ள கோதபாளையம் பகுதியில் இருந்து மான் வழி தவறி வந்திருக்கலாம். நாய்கள் கடித்துக் குதறியதால் மான் காயமடைந்ததா? அல்லது வாகனங்கள் ஏதேனும் மோதி காயம் ஏற்பட்டதா என்று தெரியவில்லை. மருத்துவ சிகிச்சைக்குப் பின், மான், வனப்பகுதியில் விடுவிக்கப்படும்,' என்றார்.