/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழனியப்பா பள்ளியில் புத்தாக்க பெருவிழா; உலகத்தர கல்விக்கு உத்தரவாதம்
/
பழனியப்பா பள்ளியில் புத்தாக்க பெருவிழா; உலகத்தர கல்விக்கு உத்தரவாதம்
பழனியப்பா பள்ளியில் புத்தாக்க பெருவிழா; உலகத்தர கல்விக்கு உத்தரவாதம்
பழனியப்பா பள்ளியில் புத்தாக்க பெருவிழா; உலகத்தர கல்விக்கு உத்தரவாதம்
ADDED : ஜூன் 09, 2025 12:26 AM

அவிநாசி; அவிநாசி, பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில், புத்தாக்க பெருவிழா கொண்டாடப்பட்டது.
கவுரவ விருந்தினர்களாக டாக்டர் கிருஷ்ணராஜ் வாணவராயர், சுவாமி ஹரிவ்ரதானந்தா மகராஜ் பங்கேற்று, பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர், மகாத்மா காந்தியடிகள் மற்றும் விவேகானந்தர் சிலைகளை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
பயனீர் கலை அறிவியல் கல்லுாரியின் முதல்வரும், தமிழத்துறை தலைவருமான டாக்டர் முருகேசன் பங்கேற்று, கல்வி கற்பதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
மாணவர்கள் பயன் பெறும் வகையில், சர்வதேச தரப்பில் மேம்படுத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு மைதானங்கள், இசைக் கருவிகள் கற்பதற்கான இசைக்கூடங்கள், கணிதம், மொழி, அறிவியல் பாடங்களுக்கான ஆய்வகங்கள், சிறப்பு விருந்தினர்களால் திறக்கப்பட்டது.
விழாவில், பள்ளி தாளாளர் ராஜ்குமார், செயலாளர் மாதேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்து, தரமான கல்வி வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் விதத்தை மாணவர்கள், பெற்றோர் மத்தியில் விளக்கினர்.
பள்ளியின் கல்வி இயக்குனர் டாக்டர். பிரகாஷ், திட்ட கல்வி இயக்குனர் டாக்டர். சதீஷ்குமார் மற்றும் எஸ்.பி.ஆர்., அறக்கட்டளை அறங்காவலர்கள் அபிநயா, நிவேதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பள்ளி முதல்வர் வித்தியாசங்கர், விழாவின் நோக்கம், கல்வியில் புதுமை மற்றும் அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அத்தகைய புதுமையடன் கூடிய கல்வியை இப்பள்ளி வழங்கி வருகிறது எனவும் சுட்டிக் காட்டினார். பள்ளி ஆலோசகர் உமா மகேஸ்வரி, முதல்வர் யசோதை உட்பட பலர் பங்கேற்றனர்.
இப்புத்தாக்க திருவிழா மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் விழாவாக அமைந்திருந்தது.