நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: ஹஜ் பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு புத்தாக்கப் பயிற்சி முகாம், நடைபெற்றது.
மாநில ஹஜ் குழு மற்றும் திருப்பூர் மாவட்ட ஹாஜிகள் ஒருங்கிணைந்த குழு சார்பில், இப்பயிற்சி நடைபெற்றது. தேவராயம்பாளையம், கூபா பள்ளி வாசல் வளாகத்தில் பயிற்சி நடந்தது. திருப்பூர் மாவட்டத்திலிருந்து ஹஜ் செல்லும், 132 பேர் கலந்து கொண்டனர். மாநில ஹஜ் குழு மாவட்ட ஒருங்கிணைப் பாளர் சபியுல்லா தலைமை வகித்தார். பள்ளிவாசல் ஹஜ்ரத் ஜாபர் துவங்கி வைத்தார். பள்ளிவாசல் முத்தவல்லி உமர் சாலிஹ், பள்ளிவாசல் தலைவர் சலீம் பேசினர். டாக்டர் சல்மா, முகமது நிசார், கோவை ஜாவித் ஆகியோர் இது குறித்து விளக்கினர்.

