/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊடுபயிர் சாகுபடிக்கு மானியத்தில் இடுபொருள்
/
ஊடுபயிர் சாகுபடிக்கு மானியத்தில் இடுபொருள்
ADDED : ஆக 03, 2025 08:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை வட்டார தோட்டக்கலை சார்பில், தென்னையில் ஊடுபயிராக, வாழை, ஜாதிக்காய் சாகுபடிக்கு மானிய விலையில், இடு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
எனவே, தென்னையில் ஊடுபயிர் சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகள், சிட்டா, ஊடுபயிர் சாகுபடி செயதுள்ள விபரத்துடன், அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன், தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம், என, தோட்டக்கலை உதவி இயக்குனர் கலாமணி அறிவித்துள்ளார்.