தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நால் ரோட்டில் ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்

 நால் ரோட்டில் ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்

 நால் ரோட்டில் ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்


ADDED : ஏப் 13, 2026 10:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 10:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: மடத்துக்குளம் நால் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அமைந்துள்ளது. இதன் வழியாக மதுரை, திண்டுக்கல், தென்மாவட்டங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள், கார் உட்பட பல்வேறு வாகனங்கள் செல்கின்றன.

இது மட்டுமல்லாமல், நால்ரோட்டில் கணியூர் ரோடு, குமரலிங்கம் ரோடும் சந்திக்கின்றன. இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

நெரிசலால், பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில சமயங்களில் சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் பல முறை புகார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு தீர்வாக, மடத்துக்குளம் நால்ரோட்டில் ரவுண்டானா அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் வாயிலாக, போக்குவரத்து பிரச்னை தீர வாய்ப்புள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us