/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடுக்குமாடி குடியிருப்புகளில் ஆய்வு!
/
அடுக்குமாடி குடியிருப்புகளில் ஆய்வு!
ADDED : மே 17, 2025 02:31 AM

திருப்பூர்: பல்லடம் மற்றும் பெருந்தொழுவில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இயக்குனர் நேற்று ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில், பல்லடம் ஹைடெக் நகரில், 45.75 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், திருப்பூர் தெற்கு தாலுகா பெருந்தொழுவில், 20.55 கோடி மதிப்பீட்டிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இவ்விரு அடுக்குமாடி குடியிருப்புகளையும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் அன்சுல்மிஸ்ரா நேற்று ஆய்வு செய்தார்.
அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் வடிகால், தெருவிளக்கு, சாலை, குடிநீர் உள்பட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்ட இயக்குனர், மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய வசதிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பல்லடம் ஹைடெக் நகரில், 173 ஏக்கர் பரப்பளவில், 8 தளங்கள், 432 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.
இந்த குடியிருப்பில் ஒவ்வொரு வீடும், 400 சதுர அடி பரப்பளவில், ஒரு சமையலறை, படுக்கை அறை, ஹால், குளியல் மற்றும் கழிப்பிட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
பெருந்தொழுவில், 4 தளங்கள், 192 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. ஆய்வின் ேபாது, கலெக்டர் கிறிஸ்துராஜ், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் செந்தில்குமரன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.