sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

/

 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்


ADDED : ஜன 11, 2026 06:57 AM

Google News

ADDED : ஜன 11, 2026 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாநகரில், 20 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் அரசு துறைகளில் உள்ள அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதில், காவல்துறையில் எஸ்.ஐ. யிற்கு மேல் உள்ளவர்களை தேர்தல் விதிமுறைப்படி மாற்றம் செய்து வருகின்றனர். கடந்த வாரம், கோவை மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாநகரில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் சமீபத்தில் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, கோவை, சேலம் மாநகருக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்தும் திருப்பூருக்கு வந்தனர். தற்போது, அவர்களுக்கான ஸ்டேஷன்களுக்கு மாற்றம் செய்து கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் வடக்கில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், நல்லுாருக்கு ஜெகநாதன், வேலம்பாளையத்துக்கு ரேணுகாதேவி, சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு செந்தில்குமார், திருமுருகன்பூண்டிக்கு பரிமளாதேவி, நல்லுார் குற்றப்பிரிவுக்கு நிர்மலாதேவி, தெற்கு குற்றப்பிரிவுக்கு பால்ராஜ், வீரபாண்டிக்கு ராஜாகுமார், வடக்கு குற்றப்பிரிவுக்கு பிரபாதேவி, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரஞ்சித், மத்திய குற்றப்பிரிவுக்கு பிரேமா, வீரபாண்டி குற்றப்பிரிவுக்கு ரோஸ்லின், அனுப்பர்பாளையத்துக்கு மீனாகுமாரி, மங்கலத்துக்கு சசிகலா, சைபர் கிரைம் பிரிவுக்கு சொர்ணவள்ளி, மத்திய குற்றப்பிரிவு யூனிட்-1க்கு ரஜினிகாந்த், சென்ட்ரலுக்கு செல்வராஜ், கொங்கு நகர் போக்குவரத்துக்கு முருகேஷன் மற்றும் கே.வி.ஆர்., போக்குவரத்துக்கு வெங்கடாச்சலம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

 திருப்பூர் மாவட்டம் போலீசாருக்கு கட்டுப்பட்ட ஸ்டேஷன்களில் பணிபுரியும் போலீசார் முதல் போலீஸ் ஏட்டு வரையிலான, 30 போலீசார் மடத்துக்குளம், அவிநாசி, வெள்ளகோவில் மற்றும் தாராபுரம் பகுதியில் உள்ள 'ஹைவே' ரோந்து பணிக்கு இடமாற்றம் செய்து எஸ்.பி. கிரிஷ் அசோக் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us