/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முக்கிய பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை அமையுங்க
/
முக்கிய பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை அமையுங்க
ADDED : நவ 29, 2024 11:04 PM
உடுமலை: உடுமலை ஒன்றிய அலுவலக பஸ் ஸ்டாப்பில், நிழற்கூரை இல்லாததால் பயணியர் காத்திருக்க இடமில்லாமல் அவதிப்படுகின்றனர்.
உடுமலை எஸ்.என்.ஆர்., லே - அவுட், தளிரோடு மேம்பாலம் அருகிலுள்ள குடியிருப்புகளில் உள்ள மக்கள்அனைவரும், ஒன்றிய அலுவலக பஸ் ஸ்டாப்பை பயன்படுத்துகின்றனர்.
இது தவிர, அருகிலுள்ள அரசு பள்ளி குழந்தைகள், ஒன்றிய அலுவலகத்துக்கு வருவோர், பஸ்சுக்கு இந்த ஸ்டாப்பில் தான் நிற்கின்றனர்.
நாள்தோறும் நுாற்றுக்கும் மேற்பட்ட பயணியர் பயன்படுத்தும் இந்த நிறுத்தத்தில், இதுவரை நிழற்கூரை அமைக்கப்படவில்லை. தற்போது மழையும் துவங்கி விட்டதால், பயணியர் ஒதுங்குவதற்கு இடமில்லாமல் தவிக்கின்றனர்.
பஸ்சுக்கு வரும் முதியோரும் காத்திருப்பதற்கு சிரமப்பட்டு, அருகிலுள்ள கடை வாசல்களில் அமர்ந்து விடுகின்றனர். ஆனால், பஸ் வந்தவுடன் எழுந்து வர முடியாமல் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
இங்கு நிழற்கூரை அமைப்பதற்கு, நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். உள்ளாட்சி பிரதிநிதிகளும் இப்பிரச்னையை கண்டும் காணாமல் இருப்பது, பயணியருக்கு வேதனையை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து, நகராட்சியினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.