/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகராட்சியில் தொழில் உரிமம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்
/
நகராட்சியில் தொழில் உரிமம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்
நகராட்சியில் தொழில் உரிமம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்
நகராட்சியில் தொழில் உரிமம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்
ADDED : ஏப் 29, 2025 09:27 PM
உடுமலை; உடுமலை நகராட்சி பகுதியிலுள்ள தொழில் நிறுவனங்கள், உடனடியாக தொழில் உரிமம் பெற்றுக்கொள்ளுமாறு, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடுமலை நகராட்சியில், 3 ஆயிரத்து, 68 வணிக நிறுவனங்கள் உள்ளன. நகராட்சிகளின் சட்டத்தின் கீழ், அனைத்து தொழில் நிறுவனங்களும் நகராட்சியில் தொழில் உரிமம் பெற வேண்டிய கட்டாயமாகும்.
கடந்தாண்டு, 1,450 தொழில் நிறுவனங்களைச்சேர்ந்த உரிமையாளர்கள், அதற்கான உரிமம் பெற்றிருந்தனர். ஆனால், நடப்பாண்டில், இதுவரை, 400 வணிக நிறுவனங்கள் மட்டுமே தொழில் உரிமம் பெற்றுள்ளனர்.
மீதமுள்ள வணிக நிறுவனங்கள், தொழில் உரிமம் பெறவில்லை. உரிமம் பெறாத வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளும் போது, தொழில் உரிமம் பெறாமல் இருந்தால், வணிக நிறுவனங்களை மூடி, சீல் வைக்கப்படும்.
வணிகர்கள், தொழில் உரிமம் வேறு, நகராட்சிக்கு தொழில் வரி செலுத்துவது வேறு என்பதை அறிந்து, உடனடியாக நகராட்சி சுகாதார பிரிவில், உரிய கட்டணம் செலுத்தி தொழில் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும், என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.