/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்கும், மக்காத குப்பை தரம் பிரிப்பு; மார்க்கெட் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்
/
மக்கும், மக்காத குப்பை தரம் பிரிப்பு; மார்க்கெட் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்
மக்கும், மக்காத குப்பை தரம் பிரிப்பு; மார்க்கெட் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்
மக்கும், மக்காத குப்பை தரம் பிரிப்பு; மார்க்கெட் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்
ADDED : டிச 16, 2025 07:00 AM

குப்பை பிரச்னை சுப்ரீம் கோர்ட் வரை சென்றுள்ள நிலையில், மக்கள், மக்காத குப்பையை தரம் பிரித்து பெறும் செயல்பாடுகள் துவங்கியுள்ளது. மாநிலத்தின் இரண்டாவது பெரிய காய்கறி மார்க்கெட்டாக, தென்னம்பாளையம் மார்க்கெட் உள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயிகளும், வியாபாரிகளும் தினசரி வந்து செல்கின்றனர். தினசரி, 200 டன் காய்கறி வரும் நிலையில், அழுகிய, சேதமாகி வீணாகிய எட்டு முதல் பத்து டன் காய்கறி கழிவுகள் குப்பையில் சேர்க்கப்படுகிறது.
அருகிலேயே மீன் மார்க்கெட், உழவர் சந்தை உள்ள நிலையில், ஒட்டுமொத்த கழிவுகளையும் ஒரிடத்தில் இருந்து எடுத்து செல்வதும், சுத்தமாக அகற்றுவதும் மாநகராட்சி பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக பிரச்னைக்குரிய இடங்களில் இருந்து மட்டும் குப்பை அகற்றப்படுகிறது. தேங்கும் குப்பையை எடுக்க வழியில்லாமல் தொடர்ந்து சேர்ந்து வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி, தினசரி மார்க்கெட் குத்தகைதாரர் தரப்பில், மார்க்கெட் வளாகத்தில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.
அதில்,' என் குப்பை எனது பொறுப்பு; திருப்பூர் மாநகராட்சியில் குப்பைகளை சேகரித்து கொட்டும் இடங்களில் பிரச்னை நிகழ்வதால் இனி நமது தினசரி மார்க்கெட்டை துாய்மையாக வைத்துக் கொள்ள இன்று முதல் குப்பைகள் தரம் பிரிக்கப்படுகிறது. மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை அதற்கென்று தனியாக வைத்துள்ள டிரம்பில் போட வேண்டும். மக்கும் காய்கறி கழிவுகளை அதற்கென்று தரம் பிரித்து போட வேண்டும். இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

