/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆங்கில ஆசிரியருக்கு பயிற்சி அலுவலர்களுக்கு உத்தரவு
/
ஆங்கில ஆசிரியருக்கு பயிற்சி அலுவலர்களுக்கு உத்தரவு
ஆங்கில ஆசிரியருக்கு பயிற்சி அலுவலர்களுக்கு உத்தரவு
ஆங்கில ஆசிரியருக்கு பயிற்சி அலுவலர்களுக்கு உத்தரவு
ADDED : நவ 10, 2024 06:05 AM
திருப்பூர் : அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்த, ஆர்வமில்லாத ஆசிரியர்களை ஊக்கப்படுத்த, பயிற்சியளிக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தமிழில் தேர்வெழுதி, மாணவர் பலர் தேர்ச்சி பெற்று, நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்களை பெற்றாலும், ஆங்கிலத்தில் முழு அளவிலான தேர்ச்சி என்பது இன்னமும் எட்ட முடியாத சாதனையாகவே உள்ளது.
நடப்பாண்டு ஆங்கில ஆசிரியர்களில் கற்பித்தல் திறன், செயல்பாடுகளை மேம்படுத்த மாவட்ட அளவில் வாட்ஸ்ஆப் குழு அமைக்க இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆசிரியர், கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் இரண்டு முதுநிலை விரிவுரையாளர் தலைமையில், இரண்டு வாட்ஸ்ஆப் குழுக்களை உருவாக்க வேண்டும். அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆங்கில ஆசிரியர்களை குழுவில் இணைக்க வேண்டும்.
குழுவில் இணைக்கப்பட்ட ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் பணித்திறனை மேம்படுத்த வழிவகை செய்ய, பயிற்சி வழங்க வேண்டும்; ஆர்வமில்லாத ஆசிரியர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன செயல்பாடுகளை, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்து, முதன்மை கல்வி அலுவலர் விபரங்களை கல்வித்துறை இயக்குனரகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.