/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயிர்களுக்கு காப்பீடு; விவசாயிகளுக்கு அழைப்பு
/
பயிர்களுக்கு காப்பீடு; விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : அக் 28, 2024 05:50 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், நடப்பு 2024 - 25ம் ஆண்டில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் சிறப்பு பருவம் (நெல் - 2) மற்றும் ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்.
விவசாயிகள் தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம். நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கலை வி.ஏ.ஓ.,விடம் பெற்று, வங்கி பாஸ்புக் நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, பதிவு செய்யவேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில், நெல் - 2 ஏக்கருக்கு, 573 ரூபாய் பிரிமியம் தொகை செலுத்தி, வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் காப்பீடு செய்யவேண்டும். மக்காச்சோளத்துக்கு, 541 ரூபாய் பிரிமியம் மற்றும் கொண்டைக்கடலைக்கு 231 ரூபாய் பிரீமியம் செலுத்தி, நவம்பர் 30ம் தேதிக்குள் காப்பீடு செய்யவேண்டும். சோளம் ஏக்கருக்கு 50 ரூபாய் செலுத்தி டிசம்பர் 16ம் தேதிக்குள் காப்பீடு செய்யவேண்டும் என, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு ஏற்படும் மகசூல் இழப்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஏதுவாக, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் விவசாயிகள், பயிர் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என, மாவட்டநிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. வட்டார வேளாண் உதவி இயக்குனர்களை தொடர்புகொண்டு, கூடுதல் விவரங்கள் பெறலாம்.