sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மக்காச்சோளத்தில் படைப்புழுக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை! கோவை வேளாண் பல்கலை., விவசாயிகளுக்கு அறிவுரை

/

மக்காச்சோளத்தில் படைப்புழுக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை! கோவை வேளாண் பல்கலை., விவசாயிகளுக்கு அறிவுரை

மக்காச்சோளத்தில் படைப்புழுக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை! கோவை வேளாண் பல்கலை., விவசாயிகளுக்கு அறிவுரை

மக்காச்சோளத்தில் படைப்புழுக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை! கோவை வேளாண் பல்கலை., விவசாயிகளுக்கு அறிவுரை


ADDED : அக் 07, 2024 12:35 AM

Google News

ADDED : அக் 07, 2024 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : மக்காச்சோளத்தில், படைப்புழு தாக்குதலை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வாயிலாக கட்டுப்படுத்தலாம், என வேளாண் பல்கலை அறிவுறுத்தியுள்ளது.

உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு பிரதான சாகுபடியாக மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பயிர்களின் வளர்ச்சி தருணத்தில், பரவலாக படைப்புழு தாக்குதல் காணப்படுகிறது.

இவ்வகை புழுக்களால், சாகுபடியில் பொருளாதார சேதம் ஏற்படுகிறது. இந்நிலையில், படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து, கோவை வேளாண் பல்கலை., விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.

கோவை, வேளாண் பல்கலை., பயிர் பாதுகாப்பு மையத்தினர் கூறியிருப்பதாவது:

மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள, கடலுார், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், உடுமலை, மற்றும் அரியலுார் மாவட்டத்தில், தென்படும் மக்காச்சோள படைப்புழுவின் தீவிர தாக்குதலை உடனடியாக கட்டுப்படுத்த, கீழ்காணும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த, தமிழ்நாடு வேளாண் பல்கலை., பயிர் பாதுகாப்பு மையம் பரிந்துரைக்கிறது.

ரசாயன முறை


இளம் தளிர் பருவத்தில், அதாவது, பயிர் முளைத்த 15 முதல் -20 நாட்களில், குளோரான்டரினிலிபுரோல் 18.5 எஸ்.சி., அல்லது புளுபென்டமைடு 480 எஸ்.சி., ஆகிய ஒன்றை, ஒரு லிட்டருக்கு. 0.4 மில்லி வீதம், அல்லது அசாடிராக்டின் 1,500 பிபிஎம், ஒரு லிட்டருக்கு, 5 மில்லி தெளிக்க வேண்டும்.

முதிர் குருத்து நிலையில், அதாவது பயிர் முளைத்த 35 முதல், 40 நாளில், மெட்டாரைசியம் அனைசோபிலியே ஏக்கருக்கு, ஒரு கிலோ அல்லது எமாமெக்டின் பென்சோயேட் 5 எஸ்.ஜி., ஒரு லிட்டருக்கு 0.4 கிராம், அல்லது நொவலுரான் 10 சதவீதம் இ.ஜி., ஒரு லிட்டருக்கு, 15 மில்லி, அல்லது ஸ்பைனிடிரோம் 11.70 எஸ்.ஜி., ஒரு லிட்டருக்கு, 0.5 மில்லி தெளிக்க வேண்டும்.

பூ மற்றும் கதிர் உருவாகும் பருவத்தில் தேவைப்பட்டால், முதிர் குருத்து நிலையில், ஏற்கனவே பயன்படுத்திய, இந்த பூச்சிக்கொல்லி மருந்தை தெளிக்க வேண்டும்.

வரும் முன் காக்க;


வரும் காலங்களில், மக்காச்சோள படைப்புழு தாக்குதலில் இருந்து பயிரினை தற்காத்துக் கொள்ள, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை கடை பிடிக்க வேண்டும்.

இறுதி உழவின் போது, ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். சையான்ட்ரினிலிபுரோல் 19.8 சதவீதம், தயோமீத்தாக்சம், 19.8 ஆகியவற்றை, ஒரு கிலோ விதைக்கு 4 மில்லி என்றளவில் விதை நேர்த்தி செய்யவேண்டும்.

இறவையில் தட்டை பயிர், எள், துவரை அல்லது சூரியகாந்தி மற்றும் மானாவாரியில், தீவன சோளத்தை வரப்பு பயிராக மூன்று வரிசை விதைக்க வேண்டும்.

படைப்புழுக்களின் தாய் அந்திப்பூச்சி நடமாட்டத்தை கண்காணிக்க ஏக்கருக்கு, ஐந்து இனக்கவர்ச்சி பொறிகளை வைக்க வேண்டும்.

படைப்புழுவின் பாதிப்பை கட்டுப்படுத்த, மக்காச்சோளத்தின் பருவத்திற்கேற்ப, பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை உபயோகப்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைகளைவேளாண்துறை வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us